புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
குளித்தலை அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
குளித்தலை ஒன்றியம், திம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெத்தினம்பிள்ளை புதூர் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் நேற்று அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுபானக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ரெத்தினம்பிள்ளைபுதூர் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அரசு மதுபானக்கடை திறப் பதற்காக கட்டிடம் கட்டப் படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்து. உடனடியாக அங்கு சென்று கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினோம். அப்போது இங்கு மதுபானக்கடைக்காக கட்டிடம் கட்டப்படவில்லை என கூறினர்.
பாதுகாப்பு இருக்காது
ஆனால் தற்போது இன்று (நேற்று) அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடை அருகே உள்ள சாலை வழியாக எங்கள் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பஸ், சைக்கிளில் சென்று வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே எங்கள் பகுதிக்கு பஸ் இயக்கப்படுவதால் பெரும்பாலும் பல கிலோ மீட்டர் நடந்து சென்றே வருகின்றோம். தற்போது இங்கு அரசு மதுபானக்கடை நடத்தினால், இச்சாலை வழியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே மதுபானக்கடையை உடனடியாக அகற்றவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கடையில் வைத்திருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் வேன் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட பின்னரே தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.