எண்ணூர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 7 பேர் கைது

எண்ணூர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-31 21:30 GMT
திருவொற்றியூர்,

எர்ணாவூர் பாலத்தின் கீழ் எண்ணூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருவொற்றியூரை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 20), சுனாமி குடியிருப்பை சேர்ந்த விக்னேஷ் (19), தண்டையார்பேட்டையை சேர்ந்த நரேஷ் (22), முரளி (18) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் செல்போன் திருடர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

பணம், செல்போன் பறிப்பு

பர்மாநகர் பாலத்தில் நடந்து சென்ற நித்தியானந்த், விதின் ஆகியோரை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற எண்ணூரை சேர்ந்த பிரபாகரன் (23) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கத்தி, மோட்டார்சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது.

விம்கோ நகரில் நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன் திருட வந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் எர்ணாவூரை சேர்ந்த நாகராஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மணலி மார்க்கெட்டில் நேற்று போலீசார் ரோந்து சென்றபோது மணிகண்டன் (18) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் பஸ்களில் செல்போன் திருடுவது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்