பணிநாட்கள் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல்: போலீஸ் தடியடி
என்.எல்.சி.யில் பணிநாட்கள் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலூர்,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சமவேலைக்கு, சம ஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், என்.எல்.சி. சுரங்கம் 1ஏ-வில் மின்னியல் மற்றும் எஸ்.எம்.டி. பகுதியில் வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் பணி வழங்குவதற்கு பதிலாக 19 நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்படும் என்று என்.எல்.சி. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நாட்கள் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், சுரங்கம் 1ஏ-வில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இவர்களது போராட்டத்திற்கு அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்தி தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இப்பிரச்சினை தொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற 2 கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் இவர்களது வேலை நிறுத்த போராட்டம் நேற்று 20-வது நாளாக நீடித்தது.
இந்த நிலையில், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள், வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை வடலூர் நான்கு முனை சந்திப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஒன்று திரண்டனர். இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க., ஏ.ஐ.டி.யு.சி., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு திரண்டனர்.
பின்னர் காலை 10.15 மணிக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடேசன்(நெய்வேலி), ஈஸ்வரன்(விருத்தாசலம்) மற்றும் குறிஞ்சிப்பாடி தாசில்தார் ஜான்சிராணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் விருத்தாசலம்-கடலூர் சாலை, கும்பகோணம்-சென்னை சாலையில் சுமார் 1 மணிநேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மறியலை கைவிடக்கோரி போலீசார் போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் சிலர் சாலையின் ஒரு பகுதியில் மறியலில் ஈடுபட்டவர்களை விலக்கி வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக சரக்கு ஆட்டோ ஒன்று சென்றது. இதில் ஆத்திரமடைந்த மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது எப்படி வாகனங்களை செல்லவிடலாம் என்று கூறி சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி தாக்கினர். இதில் சரக்கு ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.