காட்பாடி தாலுகாவில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
காட்பாடி தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
காட்பாடி,
தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன நீர் பயன்பாட்டு முறையில் மரக்கன்றுகள் நடும்படி தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி காட்பாடி தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, ஒரு மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அப்போது காட்பாடி தாலுகாவில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராசு, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.