முயல் வேட்டைக்கு சென்ற 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
குடியாத்தம் வனச்சரகம் குடியாத்தத்தை அடுத்த தொட்டமிட்டா ஆம்பூரான்பட்டி பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் வனச்சரகம் குடியாத்தத்தை அடுத்த தொட்டமிட்டா ஆம்பூரான்பட்டி பகுதியில் நேற்று மதியம் குடியாத்தம் வனச்சரகர் குமார், வனவர் கணேசன் மற்றும் வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் நாட்டுத்துப்பாக்கியோடு முயல் வேட்டைக்கு சென்றது தெரிய வந்தது. 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.
அவர்கள் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வேலூரை அடுத்த செதுவாலையைச் சேர்ந்த கார்த்திகா (வயது 27), வினோத் (24), அகரம்சேரியைச் சேர்ந்த ரஜினி (35) என்பதும் தெரிய வந்தது. 3 பேருக்கும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.