குஜராத்தி மொழியில் எழுதி இருந்த கடைகளின் பெயர் பலகைகள் உடைப்பு

மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் குஜராத்தி மொழியில் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

Update: 2017-07-28 22:36 GMT

மும்பை,

மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் குஜராத்தி மொழியில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. நேற்று இந்த கடைகளின் முன் திடீரென ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் 2 கடைகளில் இருந்த குஜராத்தி மொழி பெயர் பலகைகளை உடைத்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒரு கடைக்காரர் தானாகவே முன்வந்து தனது கடையில் இருந்த பெயர் பலகையை அகற்றினார். இந்தநிலையில், கடைக்காரர்கள் மராத்தி மொழியில் தான் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று நவநிர்மாண் சேனா கட்சியினர் எச்சரித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்தனர். பெயர் பலகைகளை உடைத்ததாக நவநிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.

மேலும் செய்திகள்