சட்டவிரோதமாக மது விற்பனை: சென்னையில் 4 பேர் கைது

சென்னை கிண்டி மடுவங்கரை சிட்டி லிங்க் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது.

Update: 2017-07-22 23:30 GMT
சென்னை,

சென்னையில் போதைப்பொருட்கள் வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை கிண்டி மடுவங்கரை சிட்டி லிங்க் சாலையில் உள்ள ‘டாஸ்மாக்’ கடை அருகே, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ராமநாதபுரம் திருவாடானை தாலுக்காவை சேர்ந்த சுதாகர்(வயது 28), விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால்(61) ஆகிய 2 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 குவார்ட்டர் மதுபாட்டில்கள், 14 பீர் பாட்டில்கள் மற்றும் ரூ.1,515 பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் காளையார் தாலுக்காவை சேர்ந்த ரத்தினம்(35) என்பவரை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 79 குவார்ட்டர் மதுபாட்டில்கள், 6 பீர் பாட்டில்கள் மற்றும் ரூ.7 ஆயிரத்து 340 பறிமுதல் செய்யப்பட்டது. 

இதே போன்று மயிலாப்பூர் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் மது விற்பனை செய்ததாக மயிலாப்பூர் மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 46 குவார்ட்டர் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. 

மேலும் செய்திகள்