நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பில் புதுவை சுதேசிமில் அருகே ‘தமிழ் தேசிய இனமும், எதிர்க்கொள்ளும் சிக்கல்கள்’ தொடர்பான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,
நாம் தமிழர் கட்சி சார்பில் புதுவை சுதேசிமில் அருகே ‘தமிழ் தேசிய இனமும், எதிர்க்கொள்ளும் சிக்கல்கள்’ தொடர்பான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், திவாகர், ஜெகதீஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:–
நாம் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். தமிழர்கள் உணர்வை இழந்து, உரிமைகளை இழந்து அடிமைப்பட்டுள்ளோம். தமிழர்கள் மதத்தாலும், சாதியாலும் பிரிந்துள்ளனர். நாம் அனைவரும் தமிழர் என்று சொல்ல வேண்டும். தமிழன் இல்லாத நாடு கிடையாது. தமிழன் அனைவரும் ஒன்றுபட்டால் எதையும் சாதிக்க முடியும்.
நாட்டின் தொழில் வளர்ச்சியால் நிலமும், வளமும் கெடாமல் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சியால் நிலங்களை பாலைவனமாக மாற்றுவதாக இருக்கக்கூடாது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தான் தனித்தனி. அவர்களின் எண்ணம் கார்பரேட் நிறுவனங்களுக்காக செயல்படுவது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசன், மறத்தமிழ்வேந்தன், மகியரசன், கடல் தீபன், கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.