சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 விவசாயிகள் பலி

சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 விவசாயிகள் பலியானார்கள்.

Update: 2017-07-22 22:15 GMT
சூளகிரி,

சூளகிரி அருகே உள்ள அட்ரகானப்பள்ளியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 50), விவசாயி. சம்பவத்தன்று இவர் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதியது.

இதில் சிவசங்கர் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவசங்கர் இறந்தார்.


சூளகிரி அருகே உள்ள சாமல்பள்ளத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (32), விவசாயி. இவர் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை கணவாய் பக்கமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் சண்முகம் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சண்முகம் இறந்தார். இந்த 2 விபத்துகள் குறித்தும் சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்