குண்டர் சட்டத்தில் கைதானவர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியில் குண்டர் சட்டத்தில் கைதானவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2017-07-22 22:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சுவாமி நாதபுரத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 45). இவருக்கு திருமணம் ஆன சில மாதங்களிலே மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின்னர், காமராஜ் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும்பழக்கம் உண்டு. மது குடித்துவிட்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, அடி-தடியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

இவர் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்.

இந்தநிலையில், நேற்று காலை காமராஜ் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்