குண்டர் தடுப்பு சட்டத்தில் பெண் சிறையில் அடைப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தியை சேர்ந்த பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.;
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தியை சேர்ந்தவர் வள்ளி (வயது 48). கள்ளச்சாராய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே கள்ளச்சாராய வழக்குகள் உள்ளதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று வள்ளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கான நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.