குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது. இதில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

Update: 2017-07-22 21:00 GMT

தென்காசி,

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது. இதில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

குற்றால சீசன்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மாதம் சீசன் தொடங்கியது. சீசன் தொடங்கிய சில நாட்களில் மிகவும் நன்றாக இருந்தது. குளிக்க முடியாத அளவிற்கு 2 முறை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை குறைந்ததால், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் வெளியூர்களில் வந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை மிகவும் குறைவாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. நேற்று காலையில் ஐந்தருவி பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு தூறியது. பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக இருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் கூட்டம்

மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மிதமான தண்ணீர் விழுந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் 2 வரிசையாக சுற்றுலா பயணிகள் நின்று குளித்தனர். பெண்களும் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

மேலும் செய்திகள்