10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் அரசு பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

அடுத்த மாதம் 4–ந் தேதி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று அரசு பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Update: 2017-07-22 21:45 GMT

விழுப்புரம்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பன்னீர்செல்வம், சீனிவாசன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில தலைவர் சுகமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். அரசுப்பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், நிரந்தர ஊதிய விகிதம் இல்லாதவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ரே‌ஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தர அரசுப்பணி வழங்க வேண்டும், ஊதியக்குழு பரிந்துரை முரண்பாடுகளை நீக்கி உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4–ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, என்றும் இந்த போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஆயிரம் பேர் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், களப்பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் வீரப்பன், பொது நூலகத்துறை பணியாளர் சங்க மாநில அமைப்பாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அரசு பணியாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்