அசத்தல் சகோதரர்கள்..!
“அரசர் காலத்து நாணயங்கள் முதல் இன்றைய காலத்து நாணயங்கள் வரை அத்தனையும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. உலக நாடுகள் பயன்படுத்திய அபூர்வ நாணயங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.
“அரசர் காலத்து நாணயங்கள் முதல் இன்றைய காலத்து நாணயங்கள் வரை அத்தனையும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. உலக நாடுகள் பயன்படுத்திய அபூர்வ நாணயங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் சில வருடங்களில் என்னிடம் இல்லாத நாணயங்களே இல்லை என்று கூறலாம்” என்று உற்சாகமாக பேச ஆரம்பித்தார், நிரஞ்ஜன். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்தவரான நிரஞ்ஜன், தாம்பரம் எம்.சி.சி. பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
“விளையாட்டாக ஆரம்பித்த ஆசை, இன்று ஆர்வமாக மாறியிருக்கிறது. ஒன்று, இரண்டாக சேர்த்த நாணயங்கள்... இன்று பொக்கிஷ குவியலாக காட்சியளிக்கின்றன. செல்லா காசுகள் என்றாலும், இதற்கு என தனி மதிப்பு இருக்கிறது. அதை நாணய சேகரிப்பாளர்கள் மட்டுமே உணர முடியும்” என்று அழுத்தம் திருத்தமாக பேசும் நிரஞ்ஜன், 3 வருடங்களுக்கு முன்பாக ஏராளமான நாணயங்களை சேகரித்திருந்தார். ஆனால் அவை அனைத்தும் தொலைந்துபோக... மனம் தளராமல் மீண்டும் நாணய சேகரிப்பில் இறங்கியிருக்கிறார்.
“நண்பர்கள், குடும்ப உறவினர்கள்... என பாரபட்சமின்றி எல்லா தரப்பிலிருந்தும், பழமையான நாணயங்களை சேகரித்து வருகிறேன். ஆரம்பத்தில் அதை வெறும் நாணயங்களாகவே பார்க்க முடிந்தது. ஆனால் ஒவ்வொரு நாணயங்களின் பின்புறத்திலும் ஒரு சின்னமும், சிறு குறிப்பும் இடம்பிடித்திருக்கும். அந்த சிறு குறிப்பிற்கு பின்னால் பெரும் கதையே ஒளிந்திருக்கும். உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்களை மட்டுமே நாணயங்களின் பின்புறம் குறிப்பிடுவார்கள். அத்தகைய கதைகளை தேடிப்படிக்கும் ஆர்வமும் என்னை நாணய சேகரிப்பில் ஐக்கியமாக்கியது” என்று பொறுப்பாக பேசும் நிரஞ்ஜன், நாணய சேகரிப்பு மட்டுமின்றி இயற்கை விவசாயத்திலும் ஈடுபாடுகாட்டுகிறார். ஊரப்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் பெரும் தோட்டத்தை உருவாக்கி, பராமரித்துவருகிறார். கூடவே விதவிதமான ரோஜா செடிகளையும் வளர்த்து வருகிறார்.
“இந்தியா, சீனா, அமெரிக்கா, கொரியா, தாய்லாந்து, ஹாங்காங், பிரேசில், இலங்கை, இங்கிலாந்து... என எல்லா நாடுகளின் வரலாறும், வரலாற்று சிறப்புமிக்க நாணயங்களும் என்னிடம் உள்ளன. என்னிடம் இருக்கும் நாணயங்களை கொண்டு வெகுவிரைவில் கண்காட்சி ஒன்றையும் நடத்த திட்டமிட்டிருக்கிறேன். அதில் பழமையான நாணயங்களை தவிர்த்து, என்னுடைய அண்ணன் ஸ்ரீராம் உருவாக்கிய சாக்பீஸ் சிற்பங்களும் இடம்பெறும்” என்று சாக்பீஸ் சிற்ப தகவலுக்கு வழி அமைத்து கொடுத்தார்.
ஆம்..!, நிரஞ்ஜனும், ஸ்ரீராமும் அண்ணன்-தம்பிகள். தம்பி நாணய சேகரிப்பில் சுட்டி என்றால், அண்ணனுக்கு சிற்ப கலையில் விருப்பம். அதுபற்றி ஸ்ரீராமிடம் பேசினோம். 10-வகுப்பு மாணவன் என்ற போதும், படிப்புடன் மற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை பற்றி பேசினார்...
* இதுவரை எத்தனை சாக்பீஸ் துண்டுகளை சிற்பமாக மாற்றியிருக்கிறீர்கள்?
உடையாமல் இருப்பது என்றால்... 200-க்கும் குறைவுதான். உடைந்த சிற்பங்கள் என்றால் நிச்சயம் 200-ஐ தாண்டிவிடும். சாக்பீஸ் துண்டுகளை சிற்பமாக செதுக்குவது கடினம். ஆனால் சிற்பமாக உருவாக்கிய சாக்பீஸ் துண்டுகளை உடைப்பது சுலபம். அதை பலமுறை நானே செய்திருக்கிறேன். கிட்டத்தட்ட சிற்ப வேலைப்பாடுகள் முடியும் தருவாயில் சாக்பீஸ் உடைந்து விடும்.
* சாக்பீஸ் துண்டுகளில் சிற்பங்களை செதுக்கும் ஆர்வம் எப்படி வந்தது?
சாக்பீஸ் மட்டுமின்றி கையில் கிடைக்கும் பென்சில், ரப்பர், மரக்கட்டை போன்ற பொருட்களிலும் சிற்பங்களை செதுக்கி இருக்கிறேன். கனமான பொருட்களை சிற்பமாக மாற்றுவதை விட... லேசான பொருளை செதுக்குவதுதான் கடினம். அதனால்தான் சாக்பீஸ் துண்டுகளை தேர்ந்தெடுத்தேன்.
* சாக்பீஸ் சிற்பங்களை செதுக்க பிரத்யேக பயிற்சி, பிரத்யேக பொருட்களை பயன்படுத்துகிறீர்களா?
இல்லை, பிரத்யேக பயிற்சிகள் இல்லை என்றாலும், தொடர் பயிற்சிகள் இருக்கிறது. அத்துடன் உபகரணங்களுக்கு அதிகமாக மெனக்கெடமாட்டேன். ஊசி முனைப்பொருட்களை கொண்டே சாக்பீஸ் சிற்பங்களை செதுக்கி விடுவேன்.
* இதுபோன்ற செயல்பாடுகளால் படிப்பு பாதிக்கிறதா?
நிச்சயம் இல்லை. நீச்சல், பேட்மிண்டன், ரோபோடிக்ஸ் பயிற்சி, மொழி பயிற்சி வகுப்புகள், நாணய சேகரிப்பு, சாக்பீஸ் சிற்பம் என பல வேலைகளில் கவனம் செலுத்தினாலும், படிக்கவேண்டிய பாடங்களை சரிவர படித்துவிடுகிறோம். அம்மா லலிதா, அப்பா வேலாயுதம் ஆகியோர் எங்களை ஊக்கப்படுத்துவதால்... படிப்பிலும், மற்ற செயல்பாடுகளிலும் ஆர்வமாக ஈடுபட முடிகிறது. கூடவே பள்ளி நிர்வாகமும் ஊக்கப்படுத்துகிறது. என்னையும், தம்பி நிரஞ்ஜனையும் பெற்றோர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றனர். அதனால் சாதிக்க முடிகிறது.