கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்போம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

Update: 2017-07-21 22:15 GMT

கிருஷ்ணகிரி

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆட்சியை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்போம். ஆனால் கமல்ஹாசன் எந்த திசையை நோக்கி பயணம் செய்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை. இது போக போகத்தான் தெரியும்.

ரஜினிக்கும், கமலுக்கும் தி.மு.க., விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அந்த கட்சி விவகாரம். தமிழகத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க சுகாதார துறையினர் வேண்டிய நடவடிக்கைளை போர்கால அடிப்படையில் செய்து வருகிறார்கள். இனி வரும் காலங்களில் மழை அதிகம் இருக்கும் என்பதால் மேலும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் அணிகள் என்பதே இல்லை. ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஒரு சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. இது விரைவில் பேசி தீர்க்கப்படும். ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஒட்டுகளை போட்டது குறித்து அந்த எம்.பி.க்களைதான் கேட்க வேண்டும். எனது ஓட்டு செல்லுபடியாகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்