ஆண்கள் கர்ப்பமாகும் அபாயம்
விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தெரியுமா? ஆண்கள் கர்ப்பமாகும் அளவுக்கு..! சில ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன.
விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தெரியுமா? ஆண்கள் கர்ப்பமாகும் அளவுக்கு..! சில ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன. இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு ஆண்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெண்களை நிலைகுலைய செய்துள்ளது.
சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று இங்கிலாந்து நதிகளில் ஆய்வு நடத்தியது. அந்த நதிகளில் வாழும் மீன்களில் பாதிக்கும் மேற்பட்ட ஆண் மீன்களின் விரைப்பைகளில் விந்தணுக்களுக்குப் பதிலாக சினை முட்டைகள் இருந்தன. இதைப்பார்த்து விஞ்ஞானிகள் திகைத்து போயினர்.
நாகரிக உலகில் பெரும்பாலான பெண்கள் கரு உருவாகாமல் இருப்பதற்காக கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். இப்படி சாப்பிடும் மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் கலந்து உள்ளது. இது பெண் தன்மையை உருவாக்கும். இந்த ஈஸ்ட்ரோஜென் சிறுநீரில் வெளியேறி சாக்கடை வழியாக நதிகளில் கலக்கிறது. அந்த நதி நீரை மீன்கள் குடிப்பதால் அவைகளுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், ஈஸ்ட்ரோஜென் கலந்த நதி நீரை தானே மக்களும் குடிக்கிறார்கள்.
இதுதான் ஆண்களின் கவலை. கடந்த 30 வருடங்களில் ஆண்களின் விந்து உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு வாழ்க்கை நடைமுறையும் ஒரு காரணம் என்றாலும், ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் விந்து உற்பத்தி குறைந்து ஆண்மை பாதிக்கப்படலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஹார்மோன் ஊசி போடப்படும் கோழிகளை சாப்பிடுவதாலும் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.
இதற்கு எதிராகவும் சில மருத்துவர்கள் கருத்து சொல்கிறார்கள். கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் அளவு மிகக் குறைவாகத்தான் உள்ளது. அவற்றால், ஆண்மை பாதிக்கும் என்று சொல்லமுடியாது. ஒரு ஆணுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை 2 கோடி இருந்தால் போதுமானது. அதற்கு குறைவாக இருந்தால்தான் ஆண்மைக் குறைவு எனப்படுகிறது. ஆண்மைக்குறைவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
மேலும் ஆண் மீனை பெண் மீனாக்க மிகக் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜென் போதும். ஆண்களை அவ்வளவு சுலபமாக பெண்ணாக மாற்ற முடியாது என்று ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.
வெளிநாடுகளில் கழிவு நீரை சுத்திகரித்துதான் ஆற்றில் விடுகிறார்கள். என்னதான், சுத்தப்படுத்தினாலும் ஈஸ்ட்ரோஜென் அளவை நீக்க முடியாது. இப்படியே நிலைமை போனால் ஒருவேளை, ஆண் கர்ப்பம் தரிக்கும் நாளும்கூட வரும் என்று பெரிய குண்டை போடுகிறார்கள் விஞ்ஞானிகள். எதற்கும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்தான் இது.