அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கூடலூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-07-20 22:45 GMT
கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 13 வார்டுக்கு உட்பட்ட தம்மணம்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக் கள் புகார் கூறி வருகின்றனர். மேலும் ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் விரைந்து வந்தார். பின்னர் நகராட்சி பொறியாளர் சிவக்குமார், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் தம்மணம்பட்டி பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும், தற்காலிகமாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும் உத்தரவிடப்படும். மேலும் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு நிதி உதவி பெறுவதற்கு கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டதும் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரி கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக் கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்