அரக்கோணம் அருகே வாலிபர் அடித்துக்கொலை தனிப்படை அமைப்பு
அரக்கோணம் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.;
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டையில் இருந்து காட்டுப்பாக்கம் செல்லும் சாலையில் லட்சுமிநகரில் உள்ள முட்புதரில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் வேலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அதுசம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவு ஓடி நின்றது. ஆனால் யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.
வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் கூறுகையில், வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் கார் வந்து சென்றதற்கான அடையாளம் உள்ளது. மர்ம நபர்கள் வாலிபரை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசிவிட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. அடித்துக்கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.