மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வாலிபர்கள் பலி நண்பர் படுகாயம்
கே.வி.குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் அவர்களது நண்பர் படுகாயம் அடைந்தார்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம் பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் விமல்குமார் (வயது 27). பசுமாத்தூரில் உள்ள முடிதிருத்தும் கடையில் வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் கார்த்தி (26), கோவரத்தினம் என்பவரது மகன் காமராஜ் (21). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். கார்த்தி கோழிக்கறி கடையிலும், காமராஜ் வேப்பூரில் முடிதிருத்தும் கடையிலும் வேலை செய்து வந்தனர்.
நேற்று மதியம் விமல்குமார், கார்த்தி, காமராஜ் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் பசுமாத்தூரில் இருந்து அர்ஜூனாபுரம் வழியாக கீழ்ஆலத்தூர் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் பசுமாத்தூர் நோக்கி குடியாத்தம் - கே.வி.குப்பம் சாலையில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விமல்குமார் ஓட்டினார்.
கொசவன்புதூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, கே.வி.குப்பம் அருகே உள்ள மாச்சனூர் கிராமத்தில் இருந்து மாட்டு சாணம் மூடைகளை ஏற்றிக் கொண்டு அர்ஜூனாபுரம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த லாரி, திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மோதிய வேகத்தில் லாரியின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் கார்த்தி, காமராஜ் ஆகியோர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விமல்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாச்சனூரை சேர்ந்த லாரி டிரைவர் கேசவன் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.