மாங்காடு அருகே வாடகைக்கு வீடு கொடுப்பதில் தகராறு; 4 பேர் கைது

மாங்காடு அருகே வாடகைக்கு வீடு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-07-20 22:30 GMT
பூந்தமல்லி,

மாங்காடு அருகே உள்ள கோவூர், சாரதா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்ராஜன். சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் இவரது வீட்டின் கீழ்ப்பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். மேல் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து மேல் வீட்டை வாடகைக்கு விடுவதாக அக்கம், பக்கத்தில் இருப்பவர்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவி 2 பேர் வந்து தாங்கள் மசாஜ் டிரெயினிங் சென்டர் வைக்கப்போவதாகவும் அதற்கு மேல் வீட்டை வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளனர். 5 நாட்களில் பதில் சொல்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு ஒரு ஆண் மற்றும் 3 பெண்கள் வந்து மீண்டும் வீட்டை வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் சுரேஷ்ராஜன் மறுத்து விட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

4 பேர் கைது

வாடகைக்கு வீடு கேட்டு வந்த பெண்கள் வீட்டின் வெளியே நிறுத்தி வைகப்பட்டு இருந்த கார் கண்ணாடியை சேதப்படுத்தியது மட்டும் அல்லாமல் தெருவில் கிடந்த கல்லை எடுத்து எறிந்து வீட்டின் கண்ணாடிகளை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து இரு தரப்பினரும் மாங்காடு போலீசில் புகார் அளித்து இருந்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் சுரேஷ்ராஜனை கைது செய்தனர்.

மேலும் வீட்டை சேதப்படுத்தியது தொடர்பாக சாரதா (வயது 35), கலாராணி (28), நிர்மலா (24), ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்