குமரி மாவட்டத்தில் மழை: முள்ளங்கினாவிளை பகுதியில் 17 மி.மீ. பதிவு

நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்திருந்தது.

Update: 2017-07-20 00:06 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இருப்பினும் அவ்வப்போது சாரல் மழையாக பெய்து கண்ணாமூச்சி காட்டி வந்தது. இடைப்பட்ட நாட்களில் வெயில் கடுமையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்திருந்தது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 3.6, பெருஞ்சாணி- 2.6, சிற்றார் 1- 6.2, சிற்றார் 2- 1.2, பொய்கை- 2.2, மாம்பழத்துறையாறு- 7, நாகர்கோவில்- 6.6, பூதப்பாண்டி- 4.1, சுருளோடு- 11, கன்னிமார்- 3.5, ஆரல்வாய்மொழி- 2.2, பாலமோர்- 15.2, மயிலாடி- 10, கொட்டாரம்- 3.4, முள்ளங்கினாவிளை- 17, கோழிப்போர்விளை- 15.2, புத்தன் அணை- 2.2, அடையாமடை- 11, இரணியல்- 4.2, ஆணைக்கிடங்கு- 13, குளச்சல்- 6.4 என்ற அளவில் மழை பதிவானது. 

மேலும் செய்திகள்