அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாயிகளை காப்போம், நெடுவாசல், கதிராமங்கலத்தை மீட்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.