சிவகங்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

8–வது ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-07-18 21:45 GMT

சிவகங்கை,

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் 8–வது ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழரசன், மகேஷ்வரன், ஜோசப் சேவியர், நாகேந்திரன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்