புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஊட்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி,
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆஸ்ரா, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழை பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கடந்த 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்கிட வேண்டும், 8–வது ஊதியக்குழுவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் ஜேக்டோ நிர்வாகிகள், பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.