சென்னை முழுவதும் போலீசார் அதிரடி சோதனை: 5 ஆயிரம் திருட்டு டி.வி.டி.கள் பறிமுதல் 6 பேர் கைது
சென்னை மாநகர் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 ஆயிரம் திருட்டு டி.வி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திருட்டு டி.வி.டி. நடமாட்டத்தை தடுக்க சோதனை நடத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் திருட்டு டி.வி.டி. தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் புத்தம் புது படங்களின் 5 ஆயிரம் திருட்டு டி.வி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.