வீட்டுமனையை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2017-07-17 19:45 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த ஒரு பெண் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் மிட்டாநூலஅள்ளியை சேர்ந்த சாலம்மாள் என்பது தெரியவந்தது. தனது வீட்டுமனையை சிலர் ஆக்கிரமித்து கொண்டு மிரட்டுவதாகவும், அந்த வீட்டுமனையை மீட்டு தரக்கோரியும், சாலம்மாள் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சாலம்மாளிடம் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்