மத்திய அரசு அதிகாரி வேலை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி. எஸ்.சி. பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2017-07-17 07:46 GMT
 இணை இயக்குனர் (மெக்கானிக்கல்) பணிக்கு 20 பேர், மருத்துவ சிறப்பு அதிகாரி (கிரேடு-3) (சர்ஜரி) பணிக்கு 10 பேர், மகப்பேறு சிறப்பு மருத்துவர் பணிக்கு 14 பேர் உள்ளிட்ட 53 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. எம்.பி.பி.எஸ் மற்றும் சர்ஜரி, கைனகாலஜி போன்ற முதுநிலை மருத்துவ படிப்பு, அறிவியல், பொறியியல் பட்டப்படிப்புடன் சுகர் டெக்னாலஜி டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு, விதிவிலக்கு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-7-2017-ந் தேதியாகும். விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்