உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கோவிலாங்குளம். இந்த ஊர் அருகே மதுரை–போடி ரெயில்வே சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்து வருகிறது.

Update: 2017-07-16 19:44 GMT

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கோவிலாங்குளம். இந்த ஊர் அருகே மதுரை–போடி ரெயில்வே சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்து வருகிறது. அதனால் போக்குவரத்திற்காக மாற்றுப்பாதை போடப்பட்டுள்ளது. இந்த பாதை மிகவும் குறுகலாகவும், போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் குண்டும் குழியுமாக இருக்கிறதாக கூறி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கூறினர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கோவிலாங்குளம் கிராம மக்கள் நேற்று கருமாத்தூர்– கோவிலங்குளம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வாலாந்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபாண்டி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ரெயில்வே நிர்வாகத்திடம் கூறி மாற்றுச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்