குமாரகோவிலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-07-16 21:00 GMT

தக்கலை

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தக்கலை அருகே குமாரகோவில், முருகன்கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தக்கலை ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் மது ஆகியோர் பேசினர்.

மாவட்ட செயலாளர் மிசா.சோமன், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் தங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்