உஷாரய்யா உஷாரு..
அவள் சொந்த ஊரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள். சுமாரான அழகு கொண்டவள் என்றாலும் குணம் நிறைந்தவள். அவளது குடும்பமும் பண்பு நிறைந்தது.

அந்த பெண்ணுக்கும்- பெரு நகரத்தில் வேலைபார்க்கும் இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த இளைஞன் கம்பீரமானவன். அழகானவன். நண்பர்களுக்கு அதிக உதவிகள் செய்யும் நல்ல மனம் படைத்தவன்.
திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில் திடீரென்று அந்த பெண், ‘தனக்கு அந்த இளைஞனின் பழக்கவழக்கம் பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்திவிடுங்கள்’ என்றாள். அமைதியான சுபாவம் கொண்ட அவள் அதிரடியாக அப்படி சொன்னது, அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியடையவைத்தது.
காரணம் என்னவென்று விசாரித்தபோது வரன் தனக்கு அனுப்பிய வாட்ஸ்அப் படங்களையும், செய்திகளையும் காட்டி கண்கலங்கினாள். ‘அவர் தனக்கு குடிப்பழக்கமே கிடையாது என்றார். குடிப்பதை பாருங்கள். குடித்ததோடு மட்டுமில்லாமல், அதை விதவிதமாக படம் எடுத்து எனக்கு அனுப்பியிருக் கிறார்..’ என்றவள், அடுத்து தொடர்ச்சியாக தனக்கு வந்த ‘மெசேஜ்’களையும் காட்டினாள். அதில் ‘குரங்கு போன்ற உன் மூஞ்சிக்கு என்னை போன்ற அழகான இளைஞன் தேவையா? என் தலைவிதியை நினைத்து நான் வருந்துகிறேன். உன்னை திருமணம் செய்துகொண்டால், இனி இதுபோல் காலம் முழுக்க குடியும் குடித்தனமுமாகத்தான் நான் வாழ்வேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
படங்களையும், மெசேஜையும் பார்த்து பெண் வீட்டார் அதிர்ந்து குழம்பிய அதே நேரத்தில், வரனின் நெருங்கிய நண்பர்கள் இருவர் போதையில், அவர்களது நண்பர்களிடம் இப்படி புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
‘எங்க நண்பன் ரொம்ப நல்லவன்டா. நாங்க வேலைவெட்டியில்லாமல் இருந்தாலும் எங்க தேவைக்கு அவன்தான் அப்பப்போ பணம் கொடுத்து உதவுறான். நாங்க தங்கிக்கொள்ள இடமும் கொடுக்கிறான். அவனுக்கு கல்யாணமாயிட்டால் எங்களை யார் கவனிப்பாங்க! அவனுக்கு மனைவியாக வருகிறவள் எங்களுக்கு அஞ்சு.. பத்து.. கொடுக்கக்கூட அனுமதிக்கமாட்டாள். அதனால எங்க சுயநலத்திற்காக அவனது கல்யாணத்திற்கு வேட்டு வைச்சிட்டோம். அவனை குடிக்கிறது மாதிரி நடிக்கவைத்து விளையாட்டுன்னு சொல்லி போட்டோ பிடிச்சோம். அதை அவனுக்கு தெரியாமல் அவனது போனில் இருந்தே, அவனது வருங்கால மனைவிக்கு அனுப்பிவைச்சோம். கண்டபடி மெசேஜ் களையும் தட்டிவிட்டோம். அதை உண்மைன்னு நம்பிவிட்ட பொண்ணு கல்யாண ஏற்பாடுகளை நிறுத்திடுங்கன்னு அடம்பிடிக்கிறாளாம். சுயநலத்துக்காக தப்பு பண்ணிட்டோம்னு மனது உறுத்துது. அதனால அவன்கிட்டேயே பணத்தை வாங்கி அளவுக்கு அதிகமாக குடிச்சிட்டோம். நாங்கதான் வில்லன்ங்கிற உண்மை அவனுக்கு இன்னும் தெரியலை. தெரிஞ்சா என்ன பண்றதுன்னும் புரியலை..’ என்று நிஜத்தைக்கொட்டினார்கள்.
இப்படிப்பட்ட போலித்தனமான நண்பர்களும், தோழிகளும் உங்களைச் சுற்றியும் இருக்கலாம். உங்கள் கல்யாண விஷயத்தில் கவனமாக இருந்துக்குங்க..!
- உஷாரு வரும்.