சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் 4 ஆயிரம் மீனவ குடும்பத்தினருக்கு தலா 1 மூட்டை அரிசி
சென்னை துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ராட்சத குழாய்கள் மூலம் மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் கடற்கரையோரம் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் சத்தியமூர்த்தி நகர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று சி.பி.சி.எல். மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனங்களின் சமுதாய பணி திட்டத்தின் கீழ் கச்சா எண்ணெய் குழாய்கள் செல்லும் 9 மீனவ கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா 1 மூட்டை அரிசி வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
நிகழ்ச்சியில் ஐ.ஓ.சி. பொது மேலாளர் தங்கராஜ். சி.பி.சி.எல். திட்ட மேலாளர் புருசோத்தம்மன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.