வரவு கால்வாய் மீது தடுப்பணை கட்டுவதை கைவிடக்கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்
கொசஸ்தலை ஆறு வரவு கால்வாய் மீது நலவாய் என்ற இடத்தில் ஆந்திர அரசு தடுப்பணை கட்ட தொடங்கியது.
பள்ளிப்பட்டு,
கொசஸ்தலை ஆறு வரவு கால்வாய் மீது நலவாய் என்ற இடத்தில் ஆந்திர அரசு தடுப்பணை கட்ட தொடங்கியது. இதற்கு வெளியகரம் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தடுப்பணை கட்டுவதை கைவிடக்கோரி பா.ம.க. சார்பில் நேற்று பள்ளிப்பட்டு வார சந்தை மைதானம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை மந்திரி வேலு, மாநில துணை பொதுசெயவாளர் பாலா என்ற பாலயோகி, மாநில இளைஞர் அணி செயலாளர் தினேஷ்குமார், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் வைத்தியலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.