இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்தவர் கைது

கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூரை சேர்ந்த 18 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

Update: 2017-07-15 23:42 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூரை சேர்ந்த 18 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனவேதனையடைந்த அந்த பெண் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அந்த பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்