கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
பனைக்குளம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் தனியார் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் கடல்நீரை குடிநீராக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் இருந்து ரசாயனம் கலந்த உப்பு கழிவுநீரை கிருஷ்ணாபுரத்தில் உள்ள அன்னாவி ஊருணியிலும் அருகில் உள்ள நிலங்களிலும் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஊருணி தண்ணீர் உப்புநீராக மாறியதுடன் விஷத்தன்மை ஏற்பட்டு மீன்கள் செத்து மிதந்ததாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ. பேபி தலைமையில் ராமநாதபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர், குடிநீர் வாரிய செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர், நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், தாசில்தார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர் கூட்டுக்குழுவின் முன்பு கடந்த கடந்த மே மாதம் 23-ந்தேதி நேரில் ஆஜராகி ஒரு மாத காலத்திற்குள் கட்டமைப்புகளை உரிய வரைமுறைகளின்படி சரிசெய்து கொள்வதாக உறுதியளித்து இருந்தார். ஆனால் கடந்த 5-ந்தேதி அதிகாரிகள் மீண்டும் அங்கு சென்று ஆய்வு செய்தபோது எவ்வித மாற்றமும் இல்லாமல் அந்த நிறுவனம் முந்தைய நிலையிலேயே இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கூட்டுக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அந்த நிறுவனத்தின் கட்டமைப்புகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரி செய்து உரிய வரைமுறைகளின்படியான தக்க சான்று பெற்று கூட்டுக்குழுவின் முன் சமர்ப்பிக்கும் வரை தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் தனியார் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.), பனைக்குளம் ஊராட்சி கிராம பொதுமக்கள் சார்பில் பனைக்குளம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக அவர்கள் சோகையன்தோப்பு காளிகோவில் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அப்துல் கம்பம் சாலை வழியாக பனைக்குளம் பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜான் சவுந்திரராஜ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கிராம தலைவர்கள் கிருஷ்ணாபுரம் சின்னத்தம்பி, சோகையன்தோப்பு சூரிய நாராயணன், புதுக்குடியிருப்பு பால்ச்சாமி, பனைக்குளம் ஜமாத் தலைவர்கள் மற்றும் அனைத்து கிராம தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் முனியாண்டி, துணை தலைவர் முத்துவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெய்னுல் அஸ்லாம், சலாமுல் அன்சார், முன்னாள் கவுன்சிலர் வேல்ச்சாமி, பனைக்குளம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கணேசன் மற்றும் அனைத்து சமுதாய அமைப்பு இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு காந்திமதிநாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவிபட்டினம் கணேசன், உச்சிப்புளி முருகன், ராமநாதபுரம் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவிபட்டினம் கணேசமூர்த்தி, பழனி, ஜெகநாதன், ராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவு எட்வர்டு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், தனிப்பிரிவு ஏட்டு செல்வக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வருவாய் ஆய்வாளர் கலாதேவி, கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாத பூபதி ஆகியோர் போராட்டத்தை கண்காணித்தனர்.