கள்ளக்காதலியை போலீசார் அழைத்து சென்றதால் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

கள்ளக்காதலியை போலீசார் அழைத்து சென்றதால் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2017-07-15 22:30 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகா தினையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 25). இவர் திருப்பூர் அருகே பல்லடத்தில் பனியன் கம்பெனி ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அங்கு வேலை செய்த சீதா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதல் உருவானது. அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நந்தகுமார் 2 குழந்தைகளுக்கு தாயான சீதாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய சொந்த ஊரான தினையத்தூருக்கு அழைத்து வந்துள்ளார். இதனை அறிந்த சீதாவின் கணவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன் பேரில் பல்லடம் போலீசார் தினையத்தூருக்கு வந்து சீதாவை அழைத்து சென்றுவிட்டனராம்.

இதனால் மனமுடைந்த நந்தகுமார் மதுவில் விஷம் கலந்து குடித்து அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் மாரி இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது நசீர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தகுமாரின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்