விழுப்புரத்தில் தார் சாலை அமைக்கும் பணி லட்சுமணன் எம்.பி. பார்வையிட்டார்
விழுப்புரத்தில் ரூ.43½ லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை லட்சுமணன் எம்.பி. பார்வையிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாதா கோவிலில் இருந்து கண்ணகி தெரு வரையுள்ள கல்லூரி சாலை கடந்த 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும்- குழியுமாக காட்சியளித் தது. இதனால் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி விழுப்புரம் தொகுதி மாநிலங்களவை உறுப் பினர் டாக்டர் லட்சுமணனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அவர் ரெயில்வே துறையிடம் முறையாக அனுமதி பெற்றதையடுத்து, 850 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட தார் சாலை அமைக்க அவரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.43 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நேற்று காலை லட்சுமணன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதே நேரத்தில் தரமானதாகவும் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், நகர அவைத்தலைவர் அன்பழகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் ராஜேந்திரன், மகளிரணி செயலாளர் மல்லிகாமோகன், கோலியனூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குப்புசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணவாளன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதா கோதண்டராமன், ராஜ்குமார், வக்கீல் ராமரமேஷ், மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் அன்பரசு உள்பட பலர் உடனிருந்தனர்.