காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

காமராஜரின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2017-07-15 22:30 GMT
கடலூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 115-வது பிறந்தநாள் விழா கடலூரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மஞ்சக்குப்பத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் குமார் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சாந்திராஜ், கிஷோர்குமார் மற்றும் காமராஜ், ராமராஜ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சொத்து மீட்புக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், செல்வகுமார், பாண்டுரங்கன், ஓவியர் ரமேஷ், நகர செயலாளர்கள் கோபால், சங்கர், மணிமுத்து, இளைஞர் காங்கிரஸ் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வண்டிப்பாளையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை காங்கிரசார் வழங்கினார்கள்.

இதேபோல் கடலூர் நகர தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் நேரு பவனில் நடந்த விழாவுக்கு நகர தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஞானசந்திரன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார். மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராஜேந்திரன், ராஜலிங்கம், சேகர், மாவட்ட பொது செயலாளர் வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் அலமுதங்கவேல், இலக்கிய அணி தலைவர் எழிலன், மாணவரணி தலைவர் சதீஷ், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் பழ.தாமரைக் கண்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புச்செயலாளர் பி.ஆர்.பி. வெங்கடேசன், மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் விஜயவர்மன், நிர்வாகிகள் ரமேஷ், சந்திரகாசு, சத்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்