மதுபாட்டில் கடத்தி சென்ற கார், வாய்க்காலில் கவிழ்ந்தது தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
திட்டச்சேரி அருகே மதுபாட்டில் கடத்தி சென்ற கார், வாய்க்காலில் கவிழ்ந்தது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திட்டச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை மாவட்டம் திட்டச்சேரி வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திட்டச்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், ஏட்டு சிவக்குமார் மற்றும் போலீசார் திட்டச்சேரி அருகே உள்ள அண்ணா மண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல், மாற்று பாதையில் சென்றது.
இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். புதுக்கடை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் கார் கவிழ்ந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,872 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் வாகனம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.