காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2017-07-15 22:15 GMT
புதுக்கோட்டை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை நகர தி.மு.க. சார்பில் காமராஜபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காமராஜபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட நாடார் உறவின்முறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காமராஜபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட நாடார் இளைஞர் பேரவை சார்பில் திருமண மண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரிய நாச்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் திறந்து வைத்த தர்மராஜ்பிள்ளை நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் நாடார் உறவின்முறை நிர்வாகிகள், நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வளாகத்தில் பள்ளி மாணவிகள் காமராஜரின் உருவ படத்தை வண்ண பொடிகளால் வரைந்து, அதன் முன்பு கல்வி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதேபோல் கீரனூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடைவீதியில் காந்திசிலை அருகே வைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இணை செயலாளர் ஆனந்த்மாணிக்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டைப்பட்டினத்தில் நாடார் பேரவை சார்பில் கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகே வைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் நாடார் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கு வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுப்பையா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோட்டைமேடு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்