வீட்டில் இருந்தவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு

திசையன்விளை அருகே உள்ள பெருங்குளம் கோவில் தெருவை சேர்ந்தவர் கோயில்ராஜ் (வயது 56). இவர் அவருக்கு சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Update: 2017-07-15 20:00 GMT

திசையன்விளை,

திசையன்விளை அருகே உள்ள பெருங்குளம் கோவில் தெருவை சேர்ந்தவர் கோயில்ராஜ் (வயது 56). இவர் அவருக்கு சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த துரைராஜ் மகள் மேரி அந்தோணி, அவரது சகோதரிகள் செல்வி, ஜெயா, சகோதரர் ஜேசு, அதே ஊரைச் சேர்ந்த ஜேசுராஜா, செட்டிவிளை பங்கு ராஜா ஆகியோர் கோயில்ராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். கத்தி, கம்பி, கம்பு, கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி வெளியேற்றிவிட்டு, வீட்டில் இருந்த பாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர், டி.வி. உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்று விட்டதாக திசையன்விளை போலீசில் கோயில்ராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து மேரி அந்தோணி உள்பட 6 பேரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்