ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33).

Update: 2017-07-14 23:23 GMT

வண்டலூர்,

இவர் கடந்த 10–ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து விஜயகுமார் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்