கிராம பஞ்சாயத்து தலைவரின் மகனை தாக்கி கொள்ளை முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் கைது

விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகா ரேவதகாம்வ் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகன் காமேஷ் பட்டீல். இவர், நேற்று முன்தினம் 3 பேருடன் அனச்சி மேம்பாலம் அருகே நின்றார்.

Update: 2017-07-14 22:59 GMT

பெங்களூரு,

விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகா ரேவதகாம்வ் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகன் காமேஷ் பட்டீல். இவர், நேற்று முன்தினம் 3 பேருடன் அனச்சி மேம்பாலம் அருகே நின்றார். அப்போது, அங்கு சென்ற மர்மநபர்கள் காமேஷ் பட்டீல் உள்பட 3 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மேலும், காமேஷ் பட்டீல் அணிந்திருந்த தங்க நகைகள், செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த தாக்குதலில் அவர்கள் 3 பேரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து சாலகி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக காமேஷ் பட்டீலை தாக்கியதாக 3 பேரையும், இந்த தாக்குதலை நடத்த தூண்டியதாக இண்டி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிகாந்தே பட்டீலையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தி விசாரணையில், முன்விரோதத்தில் மராட்டியத்தை சேர்ந்த மணல் குத்தகைத்தாரர் பிண்டு என நினைத்து காமேஷ் பட்டீல் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்