விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்குவதற்கான கால வரையறை நீட்டிப்பு
விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்குவதற்கான கால வரையறையை ஆகஸ்டு 31–ந் தேதி வரை நீட்டித்து மராட்டிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மும்பை,
இந்நிலையில், இத்திட்டத்தை ஆகஸ்டு 31–ந் தேதி வரை நீட்டிப்பதாக மாநில அரசு நேற்று மற்றொரு அறிவிக்கை வெளியிட்டது.
இத்திட்டத்தின்கீழ் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான விவசாயிகளே வங்கியில் விண்ணப்பித்து இருப்பதாகவும், நிபந்தனைகள் கடினமாக இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் வங்கிகளை அணுகவில்லை என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுபற்றி கூட்டுறவுத்துறை மந்திரி சுபாஷ் தேஷ்முக்கிடம் கேட்டதற்கு, ‘‘என்னுடைய கணக்கின்படி, 15 லட்சத்துக்கும் குறைவான விவசாயிகளே இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இருக்கின்றனர். சொந்த நீர்ப்பாசன வசதி பெற்றிருக்கும் விவசாயிகள் பெரும்பாலும் இத்திட்டத்தை விட்டு விலகியே இருக்கின்றனர்’’ என்றார்.