‘ஒவ்வொருவருக்கும் மாட்டு இறைச்சி சாப்பிட உரிமை இருக்கிறது’ மத்திய மந்திரி பேட்டி
நாக்பூர் மாவட்டம் கடோல் பகுதியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சலீம் இஸ்மாயில் (வயது 31) என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கடந்த புதன்கிழமை சரமாரியாக தாக்கியது.
மும்பை,
நாக்பூர் மாவட்டம் கடோல் பகுதியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சலீம் இஸ்மாயில் (வயது 31) என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கடந்த புதன்கிழமை சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி நேற்று மும்பையில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது:–
ஒவ்வொருவருக்கும் மாட்டு இறைச்சி சாப்பிட உரிமை இருக்கிறது. ஆட்டு இறைச்சியின் விலை அதிகம் என்பதால், பொதுமக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். நர மாமிசம் சாப்பிடுபவர்கள் பசு பாதுகாவலர்களாக மாறுவது சரி அல்ல. பசு பாதுகாவலர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்ள கூடாது.
இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.