கர்நாடக டி.ஜி.பி. மீது புகார் தெரிவித்த டி.ஐ.ஜி. ரூபாவுக்கு கவர்னர் பாராட்டு

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2017-07-14 22:45 GMT

புதுச்சேரி,

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவின் நடவடிக்கைக்கு புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரூபா எந்த இடத்தில் பணியாற்றினாலும் இதுபோல் உறுதியாக இருக்கவேண்டும். உங்களை போன்றவர்கள்தான் இந்த நாட்டுக்கு தேவை. நீங்கள் எதிர்கால இளைஞர்களின் உந்துசக்தியாக இருப்பீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறை தொடர்பாக குற்றச்சாட்டுகள் வரும்போது, உடனே உயர் அதிகாரிகளுடன் கூட்டாக சென்று ஆய்வு செய்தால் அது சிறப்பாக இருக்கும். அதுதான் தலைமை பண்புக்கு சரியானதாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கவர்னரின் பாராட்டுக்கு டி.ஐ.ஜி. ரூபாவும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், உங்களது ஆதரவு வார்த்தை எனக்கு 100 யானைகளின் பலத்தை கொடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்