கடலூரில் இந்திய குடியரசு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய குடியரசு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-07-14 22:00 GMT

கடலூர்,

அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய குடியரசு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சிவராஜ் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் கந்தன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பால. வீரவேல் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் தெய்வசிகாமணி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், கடலூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி செயலாளர் தமிழரசி, கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்