கதிராமங்கலம் போராட்டம்: திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-07-14 22:15 GMT
திருவாரூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் அருண் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் இனியன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் தெட்சிணாமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் டி.மதன், நிர்வாகிகள் பிரதீப், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். அதற்காக போராடியவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்