நிலக்கோட்டை, வேடசந்தூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிலக்கோட்டை
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தணை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜோதியம்மாள் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராமு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெள்ளைத்தாய், பொருளாளர் மாரியம்மாள், ஒன்றிய இணை செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய துணைத்தலைவர் பி.மல்லிகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய தேக்கநிலை ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். 8–வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.