திருப்பூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-07-14 22:30 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைதலைவர் ராஜகோபால் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணை தலைவர் ரமேஷ், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் உடனடியாக அரசு நிர்வாகத்தை அணுகக்கூடிய வகையிலும், அவர்களின் பயணநேரம் குறையக்கூடிய வகையிலும் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சிகளை பிரிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியை மக்களுக்கு விரைவில் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீண் செலவுகளை குறைக்கும் பட்சத்தில் நிரந்தர வாக்காளர் பட்டியலை ஊராட்சி வார்டு வாரியாக தயாரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்