குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2017-07-14 00:09 GMT
வாணாபுரம்,

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். அதில், கிராமங்களில் சந்தேகப்படும் படியான நபர்களை பார்த்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகை பாலீஷ் போடுவதாக கூறி நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை நூதனமுறையில் திருடி சென்று விடுவார்கள். எனவே, நகைகளை கேட்டால் கழட்டி கொடுக்க வேண்டாம்.

நீங்கள் பணம் எடுத்து செல்லும்போது மர்ம நபர்கள் உங்களுடைய பணம் கீழே கிடக்கின்றது என்று கூறி உங்கள் சிந்தனையை மாற்றி நீங்கள் வைத்துள்ள பணத்தை திருடி சென்று விடுவார்கள். எனவே நீங்கள் எடுத்து செல்லும் பொருட்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்று அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்